top of page

Student's Training Programme (LK - STP)

நவம்பர் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் வாழ்க்கை திறன் கல்வி பயிற்சி நடைபெற்றது. 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவியர் இதில் கலந்துக் கொண்டனர்.

 

பள்ளி ஆசிரியைகள் திருமதி அந்தோணி அம்மாள் , செல்வி ரம்யா ,செல்வி தினா ,ஆகியோரால் திட்டமிடப்பட்ட பயிற்சி இதில் பங்கேற்ற மாணவியர்க்கு அளிக்கப்பட்டது . மாணவியரின் வாழ்க்கை திறன் உயர ஊக்குவிக்கும் இப்பயிற்சியின் இறுதியில் ,ஓவியம் ,கட்டுரை ,பேச்சு போட்டிகள் இடம் பெற்று ,வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன

 

 

Teacher's Training Programme (LK - TTP)

காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை டைமண் அரங்கத்தில் முதலுதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

23-12-2012 அன்று காலை 10 மணிக்கு, இலண்டனில் உள்ள காயல் நலமன்றம் (Kayal Welfare Association of United Kingdom) இம்முகாமை நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு kayalconnection.com ஆலோசகர் ஹாஜி எஸ்.எம். உஜைர் தலைமை ஏற்று உரையாற்றினார். 

 

இலண்டன் காயல் நலமன்றத்தின் தலைவர் டாக்டர். எஸ்.ஓ. செய்யதகமது M.B., M.R.C.O.G., (U.K.) முன்னிலை வகித்து இம்முகாம் குறித்த அறிமுக உரையாற்றினார்.

 

குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ்.எம்.அபுபக்கர் M.B.B.S., D.C.H., இதய நோய் நிபுணர் டாக்டர் பாதுஷா, குழந்தைநல டாக்டர் நந்தகுமார் ஆகிய மருத்துவர்கள் இம்முகாமில் பங்கேற்றார்கள்.

 

இவர்கள் முதலுதவியில் விழிப்புணர்வை உருவாக்கும் விதத்தில், செய்முறையில் (Demo) பொதுமக்களுக்கு விளக்கினார்கள். மேலும் முகாமில் பங்கேற்றோரின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்கள்.திடீர் மயக்கம், வலிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படும்போதும், விபத்து ஏற்படும்போதும், கைகால்கள் முறியும் போதும் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய விபரங்கள் இச்செய்முறையில் இடம் பெற்றது.

 

இன் நிகழ்ச்சியில் எம் பள்ளியின் ஆசிரியைகள் கலந்து கொண்டு முதலுதவி பயிற்சி பெற்றார்கள்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

bottom of page