L K MATRICUALTION HIGHER SECONDARY SCHOOL
RUN BY LKS GOLD HOUSE EDUCATIONAL CHARITABLE TRUST
AN ISO 9002 TUV CERTIFIED SCHOOL
A.S. SULAIMAN BLOCK 2011
NEWS & EVENTS - 2015
எல்.கே.மெட்ரிக் பள்ளியில், ப்ளஸ் 2 மாணவர்களுக்கான உளவியல் மேம்பாட்டு முகாம்!
Posted January 23, 2015
பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியருக்கு, உளவியல் மேம்பாட்டு முகாம், சென்னை கே.சி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியை நிர்வகித்து வரும் ஹிந்துஸ்தான் குழுமம் சார்பில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் இம்மாதம் 20ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 14.00 மணி முதல் 15.30 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 111 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கு பொதுத் தேர்வை சந்திப்பதற்குத் தோதுவாக உளவியல் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
பள்ளிகளுக்கிடையிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியர் சாதனை!
Posted January 23, 2015
க்ளோபல் ஈவண்ட் மேனேஜர்ஸ் சார்பில் “டேலண்ட் கிட்ஸ் 2014-15” எனும் தலைப்பில் நடைபெற்ற - பள்ளிகளுக்கிடையிலான ஓவியப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவ-மாணவியர் பல பரிசுகளை வென்றுள்ளனர்.
முதல் பிரிவு ஓவியப் போட்டியில், எல்.கே.ஜி. வகுப்பைச் சேர்ந்த எம்.எம்.ஹமீத் அஃப்னான் முதல் பரிசையும், இசட்.ஏ.ஆயிஷா ஃபர்ஹா இரண்டாவது பரிசையும், யு.கே.ஜி. வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஷேக் ஷாஹுல் மூன்றாவது பரிசையும் வென்றனர்.
இரண்டாம் பிரிவிற்கான போட்டியில், மூன்றாம் வகுப்பு மாணவர் ஏ.அல்தாஃப் முதற்பரிசையும், முதல் வகுப்பைச் சேர்ந்த கே.எம்.ஃபாத்திமா ஃபத்தீனா இரண்டாவது பரிசையும், எம்.நூர் ஃபாயிஸா மூன்றாவது பரிசையும் வென்றுள்ளனர்.
மூன்றாம் பிரிவிற்கான போட்டியில், ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த எம்.ஆர்.சித்தி கதீஜா மஷூரா முதற்பரிசையும், நான்காம் வகுப்பைச் சேர்ந்த எம்.எம்.கதீஜா நாஸிரா இரண்டாவது பரிசையும், ஆறாம் வகுப்பைச் சேர்ந்த எம்.ஆமினா ஃபரீதா மூன்றாம் பரிசையும் வென்றனர்.
நான்காம் பிரிவிற்கான போட்டியில், ஏழாம் வகுப்பைச் சேர்ந்த எஸ்.எல்.சுலைஹா அஃப்ரா முதற்பரிசையும், எட்டாம் வகுப்பைச் சேர்ந்த எம்.எம்.ஆமினா முஸ்ஃபிரா இரண்டாவது பரிசையும், ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ்.ஹபீபா மூன்றாம் பரிசையும் வென்றனர்.
ஐந்தாம் பிரிவிற்கான போட்டியில், 11ஆம் வகுப்பைச் சேர்ந்த எஸ்.ஏ.உல்ஃபத் முதற்பரிசையும், 10ஆம் வகுப்பைச் செர்ந்த எம்.ஏ.ஏ.முஷர்ரஃபா சுல்தானா இரண்டாவது பரிசையும், 11ஆம் வகுப்பைச் சேர்ந்த ஆர்.எஸ்.நமீரா மூன்றாம் பரிசையும் வென்றனர்.
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.
பல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியர் சாதனை!
Posted July 08, 2015
.தூத்துக்குடி சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில், ROMPERLO EXPO 2015 என்ற தலைப்பில், பல்சுவைப் போட்டிகள் இம்மாதம் 02, 03 நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியரும் பங்கேற்று, பல பரிசுகளை வென்றுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:-
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்
மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் சிறப்பிடம்!
Posted August 09, 2015
2015.2016 ஆண்டிற்கான மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். அவர்களது விபரங்கள் வருமாறு:-
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற போட்டிகளில், எல்.கே.மெட்ரிக் பள்ளியின் சீனியர் பிரிவு இரண்டாமிடம் பெற்றது!
Posted August 25, 2015
தூத்துக்குடி ஹோலி க்ராஸ் மேனிலைப்பள்ளியின் சார்பில் CROSA - 2015 எனும் தலைப்பில் பல்வேறு போட்டிகள், இம்மாதம் 20, 21 நாட்களில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவியர், பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர். விபரப் பட்டியல் வருமாறு:-
சீனியர் பிரிவிற்கான போட்டிகளில் இப்பள்ளி, இரண்டாமிடம் பெற்று, Runner-Up கேடயத்தைப் பெற்றுள்ளது.
அதுபோல, கடந்தாண்டு நடைபெற்ற FIITJEE அறிவியல் திறனாய்வுத் தேர்வில் 236 மாணவ-மாணவியர் பங்கேற்றிருந்தனர். அவர்களுள் 5 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த ஐவருள், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்,
கே.ஃபரீதா (09ஆம் வகுப்பு),
எஸ்.ஐ.கதீஜா (08ஆம் வகுப்பு),
எஸ்.எச்.சாமு ரய்ஃபா (11ஆம் வகுப்பு)
ஆகிய 3 மாணவியர் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று, Runner-Up கேடயத்தைப் பெற்றுள்ளனர்.
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற போட்டிகளில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு பரிசுகள்!
Posted October 28, 2015
தூத்துக்குடி நகரில், JCI Tuticorin Pearl City அமைப்பின் சார்பில், JAYCEE WEEK 2015 எனும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரும் பங்கேற்றனர். சிறப்பிடங்களை அடைந்து பரிசு பெற்ற மாணவியரின் விபரப்பட்டியல் வருமாறு:-
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.