top of page

​NEWS  &  EVENTS - 2011

Higher Secondary Courses - Approved

Posted February 25, 2011

 

காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளியில் தற்சமயம் 10ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அப்பள்ளி மாணவியர் இரண்டாம் முறையாக பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை இவ்வாண்டு சந்திக்கவுள்ளனர். 

இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு துவங்குவதற்கு அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இயற்பியல், வேதியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களைக் கொண்ட முதல் பிரிவு, 

இயற்பியல், வேதியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களைக் கொண்ட இரண்டாம் பிரிவு, 

இயற்பியல், வேதியல் தாவரவியல், விலங்கியல் பாடங்களைக் கொண்ட மூன்றாம் பிரிவும், 

வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களைக கொண்ட நான்காம் பிரிவும் இவ்வாண்டு துவக்கப்படவுள்ளது. 

இப்பாடப் பிரிவுகளுக்கான மாணவியர் சேர்க்கை வரும் மார்ச் மாதம் 02ஆம் தேதி துவங்கும் எனவும், மேலும் விபரங்களறிய பள்ளியின் +91 4639 285999, 285855 ஆகிய தொலைபேசி எண்களில், ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து இதர நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தொடர்புகொண்டு கேட்டறியலாம் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tuticorin Cultural Club Competitions

Posted July 29, 2011

 

அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலாச்சார சங்கம போட்டிகளில் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கலாச்சார சங்கம நிகழ்ச்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகள் பலவற்றில் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரும் கலந்துகொண்டனர். 

நடுநிலை வகுப்புகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில், 

ஆங்கில கட்டுரைப் போட்டியில், அப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி எம்.ஏ.கே.சித்தி மதானி முதலிடத்தையும், 
எட்டாம் வகுப்பு மாணவி எம்.எஸ்.ஃபாத்திமா முனவ்வரா ஆங்கில பேச்சுப் போட்டியில் மூன்றாமிடத்தையும், 
அதே வகுப்பைச் சார்ந்த மாணவி பி.எம்.ஏ.சாரா, பொக்கே தயாரிப்பு போட்டியில் மூன்றாமிடத்தையும், 
ரங்கோலி போட்டியில், எட்டாம் வகுப்பைச் சார்ந்த மாணவி ஏ.எம்.ஃபாத்திமா ஃபஸீஹா, எம்.தனலக்ஷ்மி ஆகியோர் மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 

உயர்நிலை வகுப்புகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில், 

ஒன்பதாம் வகுப்பு மாணவி யு.இசட்.கே.ஹலீமா, தமிழ் பேச்சுப் போட்டியில் முதலிடத்தையும், 
அதே வகுப்பைச் சார்ந்த மாணவி எஸ்.எச்.ஜென்னத் முஃமினா ஆங்கில பேச்சுப்போட்டியில் முதலிடத்தையும், 
அதே வகுப்பைச் சார்ந்த பி.மேனகா, ஏ.என்.அஷ்ருன் நிஸா ஆகிய மாணவியர் மெஹந்தி வரைகலைப் போட்டியில் இரண்டாமிடத்தையும், 
மாற்றுடைப் போட்டியில் அப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி எம்.எஸ்.ஹவ்வா நவ்ரீன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். 

மேல்நிலை வகுப்புகளுக்கான பிரிவில், 

அப்பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி எம்.ஏ.ஜொஹரா வாஸிஆ, கே.சாந்த குமாரி ஆகியோர் சிகையலங்காரப் போட்டியில் முதலிடத்தையும், 
அதே வகுப்பைச் சார்ந்த மாணவி பி.மதீஹா ஆரி வேலைப்பாடு போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர். 

போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.

Thirukural Vizha 2011

Posted October 10, 2011

 

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய திருக்குறள் விழா 2011 மாணவர் பேச்சுப் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் சார்பில் 12 மாணவியர் கலந்துகொண்டனர். 

அதில், அப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி மதுமிதா, எட்டாம் வகுபபு மாணவி முஹம்மத் மஃபாஸா, ஆறாம் வகுப்பு மாணவி கதீஜா நூரிய்யா, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹலீமா, பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா ஷுக்ரிய்யா ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். 

அரையிறுதிச் சுற்றில், மாணவி ஆயிஷா ஷுக்ரிய்யா முதலிடம் பெற்றதையடுத்து, 27.08.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில், நெல்லை மண்டலத்தின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளார். 

சாதனை மாணவியரை பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
டந்த ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை முள்ளக்காடு சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ரோம்பெரிலோ எக்ஸ்போ 30 என்ற போட்டியில் இப்பள்ளியின் 11 ஆவது வகுப்பு மாணவி ஏ.எஸ். அகமது முன்ஸிரா பேச்சுப் போட்டியில் மூன்றாவது பரிசினையும்,  இதே மாணவி நினைவுத் திறன் போட்டியில் இரண்டாவது பரிசினையும், 8ஆவது வகுப்பு மாணவி கே. பரீதா ஓவியப் போட்டியில் இரண்டாவது பரிசினையும் பெற்றனர்.

Various Competitions - 2011

Posted August 4, 2013

 

அண்மையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பலவகைப் போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 

தூத்துக்குடி ஹோலி க்ராஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான கலை - இலக்கியப் போட்டியில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி எஸ்.ஜே.சிராஜ் முவஃப்ஃபிகா இளம் விஞ்ஞானி போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். 

சமையல் போட்டியில், பதினொன்றாம் வகுப்பு மாணவி ஜஹ்ரா வாசிஆ மூன்றாம் பரிசைப் பெற்றுள்ளார். 

மேலும், திருச்செந்தூர் செந்தில் குமரன் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி நடத்திய தடகளப் போட்டியில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி பி.எம்.ஏ.ஸாரா, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவது பரிசும், உயரம் தாண்டுதலில் இரண்டாவது பரிசும், வட்டு எறிதலில் மூன்றாவது பரிசும் பெற்றுள்ளார். 

திருச்செந்தூரில் நடைபெற்ற சுதந்திர தின 65ஆவது ஆண்டு விழா ஓவியப் போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.ஏ.உல்ஃபத் நான்காம் பரிசைப் பெற்றுள்ளார். 

பரிசுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தமைக்கா, மாணவியரை பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.

Book Fair 2011

Posted November 17, 2011

 

காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், பள்ளி மாணவ-மாணவியருக்கான புத்தக கண்காட்சி 09.11.2011, 10.11.2011 ஆகிய தேதிகளில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

இக்கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து பள்ளி ஆசிரியையர் மாணவ-மாணவியருக்கு ஏற்கனவே தேவையான தகவல்களை வழங்கி ஊக்கப்படுத்தியதன் அடிப்படையில், கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பயனுள்ள தலைப்புகளிலான நூற்களில், 1,804 நூற்களை மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்

 

 

Drawing Competition / Science Project - 2011

Posted November 17, 2011

 

மாநில அளவிலான ஓவியப் பொட்டியில் கலந்துகொண்ட காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர் சிலர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். விபரம் பின்வருமாறு:- 

தர்மபுரியிலுள்ள மனிதவள மேம்பாடு மற்றும் ஆய்வு நிறுவனம் நடத்திய மாநில அளவிலான ஓவியப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவியும், எஸ்.அப்துன் நாஸர் என்பவரின் மகளுமான ஏ.என்.முஹம்மத் அஸ்ஹருன்னிஸா முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவர் பதக்கமும், ரூ.1,000 பணப்பரிசும் பெற்றுள்ளார். 

அதே பள்ளியின் எல்.கே.ஜி. வகுப்பு மாணவர் எம்.ஆர்.அஹ்மத் ஸலாஹுத்தீன், யு.கே.ஜி. மாணவி ஏ.ஃபாத்திமா ஃபாரிஸா, முதல் வகுப்பு மாணவி எம்.எம்.கதீஜா நாஸிரா ஆகியோரும் பரிசுகள் பெற்றுள்ளனர். 

அதுபோல, இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியும், ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகளுமான எஸ்.எச்.ஜென்னத் முஃமினா, அவரது மாவட்ட அளவிலான அறிவியல் திட்டப்பணிக்காக (Science Project) மாநில அளவிலான ஊக்க விருதும், இரண்டு புத்தகங்களும் பரிசாகப் பெற்றுள்ளார். இம்மாணவி, விரைவில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை செல்லவிருக்கிறார். 

சாதனை மாணவ-மாணவியரை பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.

 

 

Childrens Day Celebrations - 2011

Posted November 17, 2011

 

பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதியன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் கடந்த 14.11.2011 அன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. 

இவ்விழாவையொட்டி பள்ளியின் ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவியர் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ-மாணவியரின் பகட்டுடைப் போட்டியும் (Fancy dress competition) நடைபெற்றது. 

நிகழ்ச்சிகளின் இறுதியில் பள்ளியின் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. 

 

 

bottom of page