top of page

​NEWS  &  EVENTS - 2014

Tamilnadu Muslim Graduates Association (TAMGRADS)

Posted January 29, 2014

 

நடைபெற்று முடிந்த 2012-2013 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த முஸ்லிம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டிப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை, தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் சென்னையில் நடத்தியது. இதில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியரான,

(1) ஏ.எஸ்.அஹ்மத் முன்ஷிரா (த.பெ. ஆர்.அல்தாஃப் ஷம்சுத்தீன்),

(2) எம்.எம்.ஆரிஃபா (த.பெ. முஹம்மத் முஹ்யித்தீன்),

(3) எம்.ஒய்.தவ்லத் ரிஸ்வானா (த.பெ. கே.எம்.முஹம்மத் யூஸுஃப்),

(4) எல்.எச்.ஆயிஷா ஸித்தீக்கா (த.பெ. ஏ.எச..லுக்மான் ஹக்கீம்)

 

ஆகிய நான்கு மாணவிரும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ், புத்தகங்கள் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுபெற்ற மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.

Excellent Exams Tamil Hand Writing Competition

Posted January 29, 2014

 

Excellent Exams என்ற அமைப்பு நடத்திய தமிழ் கையெழுத்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 128 மாணவியர் பங்கேற்றனர்.

 

தமிழ் மாணவர் மன்றத் தேர்வில் பத்தாம் வகுப்பு பயிலும் 40 மாணவியர் பங்கேற்றனர். அவர்களுள்

 

எம்.ஏ.கே.சித்தி மதனீ,

எம்.எஸ்.சூர்ய ப்ரபா ஆகிய இரு மாணவியருக்கு இளம் தமிழறிஞர் விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

 

கையெழுத்துப் போட்டியில்,

03ஆம் வகுப்பு மாணவி எம்.ஏ.ஃபாத்திமா,

04ஆம் வகுப்பு மாணவி எம்.ஐ.ஆயிஷா பீவி,

05ஆம் வகுப்பு மாணவி எம்.ஆர்.ஃபாத்திமா முஸ்ஃபிரா,

06ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஏ.சேகு ஸஜீலா,

07ஆம் வகுப்பு மாணவி எம்.ஏ.ஜெய்னப் ஜாதிரா,

08ஆம் வகுப்பு மாணவி கே.ஆர்.கதீஜா நூரிய்யா,

09ஆம் வகுப்பு மாணவி எம்.எம்.நூர் ஃபஸ்லா ஆகியோர் விருது மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.

 

அனைத்துப் போட்டிகள் மற்றும் தேர்வுகளில் பங்கேற்ற மாணவியர் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.

National Handwriting & Colouring Competition

Posted February 27, 2014

 

மஹாராஷ்டிர மாநிலம் - புனே நகரிலுள்ள Students Development Society சார்பில், பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்கும் தேசிய அளவிலான கையெழுத்து மற்றும் வண்ணந்தீட்டும் போட்டிகள் நடைபெற்றன. நாடு முழுவதிலுமிருந்து எல்.கே.ஜி. முதல் 09ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் - கையெழுத்துப் போட்டியில் 234 பேரும், வண்ணந்தீட்டும் போட்டியில் 398 பேரும் பங்கேற்றனர்.

 

கையெழுத்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 08ஆம் வகுப்பு மாணவி கே.ஆர்.கதீஜத் நூரிய்யா தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 

இப்போட்டிகளில் பங்கேற்ற எல்.கே. மெட்ரிக் பள்ளியின் 8 மாணவியருக்கு கலா கவ்ரவ் 2013 விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற மாணவியர் விபரம் வருமாறு:-

 

கையெழுத்துப் போட்டி:

(1) ஓ.ஓவியா – 03ஆம் வகுப்பு

(2) ஜி.ஷாம்னி - 06ஆம் வகுப்பு

(3) கே.ஆர்.கதீஜத் நூரிய்யா – 08ஆம் வகுப்பு

 

வண்ணந்தீட்டும் போட்டி:

(4) எம்.ஜெய்ஸி கரோலின் – எல்.கே.ஜி.

(5) எம்.எம்.செய்யித் சுஹைல் - 01ஆம் வகுப்பு

(6) ஐ.கே.ஃபாத்திமா முகர்ரமா - 04ஆம் வகுப்பு

(7) எம்.ஆமினா ஃபரீதா - 05ஆம் வகுப்பு

(8) எம்.எஸ்.ஃபாத்திமா ஹமீதா - 09ஆம் வகுப்பு

 

ம்மாணவியருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசு பெற்ற மாணவியரை பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.

Ramperlo 2014 - Various Competition

Posted July 11, 2014

 

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில், RAMPERLO ’14 எனும் தலைப்பில், பள்ளிகளுக்கிடையிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பல போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியர் விபரப்பட்டியல்: 

03.07.2014: 
MONO ACTING: 
1. HIBA (XI STD ) – FIRST PRIZE

ENGLISH DEBATE: 
1. SITHI MADHANI (XI STD ) – FIRST PRIZE
2. FATHIMA SARAFFIYA (XI STD ) – FIRST PRIZE
3. T.T. MAIMOON MARIYAM ( XI STD ) – FIRST PRIZE

04.07.2014: 
DRAWING: 
1. M.S. FATHIMA NASIHA ( IX STD ) – FIRST PRIZE

05.07.2014: 
ENGLISH SPEECH: 
1. SAMEEHA ( VI STD ) – SECOND PRIZE

DANCE: THIRD PRIZE
1. S. DIFFIKCA ( VII STD ) 
2. G. SHAMNI ( VII STD ) 
3. N. CELSIA ( VII STD ) 
4. B. KANNAMMA ( VII STD) 
5. V. VITHINA ( VII STD ) 

FANCY DRESS: 
1. RABIYA MINHA ( VII STD ) – FIRST PRIZE


சாதனை மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். 
 

Subbiah Vidyala, Tuticorin - Various Competition

Posted July 18, 2014

 

தூத்துக்குடி சுப்பையா வித்யாலம் மகளிர் மேனிலைப்பள்ளியின் சார்பில், இம்மாதம் 12ஆம் நாளன்று அப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பல்சுவைப் போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 43 மாணவியர் பங்கேற்றனர். பின்வருமாறு மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 

(01) எம்.ஏ.கே.சித்தி மதனீ (11ஆம் வகுப்பு) 
(ஆங்கில கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம்) 

(02) எம்.எஸ்.ஃபாத்திமா நஸீஹா (09ஆம் வகுப்பு) 
(தமிழ் கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடம்) 

(03) எம்.பி.ஏ.யஹ்யா ருஸ்னா (08ஆம் வகுப்பு) 
(ஆங்கில பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம்) 


(04) செய்யிதா சுமய்யா (09ஆம் வகுப்பு) 
(ஆங்கில பேச்சுப் போடடியில் மூன்றாமிடம்) 

(05) எம்.எஸ்.ஃபாத்திமா முனவ்வரா (11ஆம் வகுப்பு) 
(ஆங்கில பேச்சுப் போட்டியில் மூன்றாமிடம்) 

(06) கே.ஆர்.கதீஜா நூரிய்யா (09ஆம் வகுப்பு) 
(தமிழ் பேச்சுப் போட்டியில் முதலிடம்) 

(07) எஸ்.எல்.சுலைஹா அஃப்ரா (07ஆம் வகுப்பு) 
(ஓவியப் போட்டியில் மூன்றாமிடம்) 

(08) எம்.எஸ்.ஃபாத்திமா ஹமீதா (10ஆம் வகுப்பு) 
(COLLAGE போட்டியில் முதலிடம்) 

(09) ஏ.ராபியா (11ஆம் வகுப்பு) 
(சத்துணவு போட்டியில் முதலிடம்) 

(10) பி.எம்.ஏ.சி.கதீஜா முஃபஷ்ஷரா & எஸ்.எம்.ஸாஹிப் நாச்சி (09ஆம் வகுப்பு) 
(ரங்கோலி போட்டியில் மூன்றாமிடம்) 

(11) எஸ்.ஏ.உல்ஃபத் & ஏ.எம்.ஃபாத்திமா ஃபஸீஹா (11ஆம் வகுப்பு) 
(பூக்கோலப் போட்டியில் இரண்டாமிடம்) 

(12) எம்.சந்தியா (09ஆம் வகுப்பு) 
(அலங்கார உடைப் போட்டியில் இரண்டாமிடம்) 

(13) ஜி.மதுமிதா (10ஆம் வகுப்பு) 
(அலங்கார உடை போட்டியில் முதலிடம்) 

இச்சாதனைகளின் காரணமாக, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாவட்ட அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. சாதனை மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். 

 

Champion Trophy - V.V. College of Engineering,Thisayanvilai

Posted August 21, 2014

 

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அளவிலான போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

விபரம் வருமாறு:- 

 

திசையன்விளையிலுள்ள வி.வி.பொறியியல் கல்லூரியின் சார்பில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அளவில் - பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள் இம்மாதம் 19, 20 நாட்களில் நடைபெற்றன. 

 

இப்போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 22 பேர் பங்கேற்றனர். அவர்களுள், 

ஆங்கில பேச்சுப் போட்டியில் - அஹ்மத் முன்ஷிரா, 

தமிழ் கட்டுரைப் போட்டியில் - எம்.ஒய்.தவ்லத் ரிஸ்வானா, 

ஆங்கில கட்டுரைப் போட்டியில் - ஜெ.மர்யம் ரஷீதா

 

ஆகிய மாணவியர் இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, தலா ரூபாய் ஆயிரம் பணப்பரிசும், பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதிக பரிகளைப் பெற்றமைக்காக, இப்பள்ளிக்கு சுழற்கேடயமும், 2 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பரிசு பெற்ற மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். 

Students Development Society - Pune (Drawing & Handwriting)

Posted August 21, 2014

 

மஹாராஷ்டிர மாநிலம் - புனே நகரின் மாணவர் மேம்பாட்டுச் சங்கம் (Studens Development Society) சார்பில், 2013 நவம்பர் 26ஆம் நாளன்று - தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி மற்றும் வண்ணம் தீட்டும் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 

எல்.கே.ஜி. முதல் 09ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்காக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், கையெழுத்துப் போட்டியில் 234 மாணவ-மாணவியரும், வண்ணம் தீட்டும் போட்டியில் 398 மாணவ-மாணவியரும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பங்கேற்றனர். 

 

காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 08ஆம் வகுப்பு மாணவி கே.ஆர்.கதீஜத் நூரிய்யா கையெழுத்துப் போட்டியில் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. 

இவ்விரு போட்டிகளிலும் பங்கேற்ற எல்.கே.மெட்ரிக் பள்ளியின் பின்வரும் மாணவியருக்கு 2013ஆம் ஆண்டிற்கான கலா கவுரவ் விருது வழங்கப்பட்டுள்ளது:- 

(1) ஓ.ஓவியா – 03ஆம் வகுப்பு
(2) ஜி.ஷாம்னி - 06ஆம் வகுப்பு
(3) கே.ஆர்.கதீஜத் நூரிய்யா – 08ஆம் வகுப்பு
(4) எம்.ஜெய்சி கரோலின் - எல்.கே.ஜி. 

இந்நான்கு மாணவியருக்கும் சிறந்த கையெழுத்துக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

(5) எம்.எம்.செய்யித் சுஹைல் - 01ஆம் வகுப்பு
(6) ஐ.கே.ஃபாத்திமா முகர்ரமா - 04ஆம் வகுப்பு
(7) எம்.ஆமினா ஃபரீதா - 05ஆம் வகுப்பு
(8) எம்.எஸ்.ஃபாத்திமா ஹமீதா – 09ஆம் வகுப்பு

இந்நான்கு மாணவ-மாணவியருக்கும் சிறந்த வண்ணம் தீட்டலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

பரிசு மற்றும் விருதுகளைப் பெற்ற மாணவ-மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். 
 

Bishop Acariya Memorial School -- Varoius Prizes

Posted August 21, 2014

 

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையிலுள்ள பிஷப் ஆசாரியா மேனிலைப்பள்ளியில், இம்மாதம் 14ஆம் நாளன்று வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

 

காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் சார்பில் பங்கேற்ற மாணவியருள், 07ஆம் வகுப்பு மாணவி எஸ்.சுமய்யா ஸல்மா நீளம் தாண்டும் போட்டியில் இரண்டாமிடமும், உயரம் தாண்டும் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.

 

அதே வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ்.எல்.ஜுலைஹா அஃப்ரா, 11ஆம் வகுப்பைச் சேர்ந்த ஜெ.ரம்யா ஆகியோர் வட்டு எறிதல் போட்டியின் இரண்டு பிரிவுகளில் மூன்றாமிடங்களைப் பெற்றுள்ளனர். 

பரிசு மற்றும் விருதுகளைப் பெற்ற மாணவ-மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர். 
 

Teachers Day & Read a Book Day - 2014

Posted September 09, 2014

 

ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு எல்.கே.மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு பேச்சு மற்றும் கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். ஆசிரியர்களை வாழ்த்தியும் மற்றும் அவர்களின் சேவையை போற்றியும் சொற்பொழிவாற்றினர்.

 

1. எம். ஜெய்சி கரோலின் (U.K.G) - மழலைப்பாடல்

2. ஐ. பாத்திமா ஜவாதா (V STD) மற்றும் எ.எஸ்.செய்யது ராபியா (V STD) - பாடல்

3. எ.எஸ். ஆயிஷா முஹக்கிரா (V STD) - கவிதை

4. எம்.டி. முகம்மது அஸ்வாக் (V STD) - பொன்மொழிகள்

5. டபுள்யூ.கே.எம். பாத்திமா ஹ{ஸ்னா (V STD) - தமிழ் சொற்ப்பொழிவு

6. எ.எஸ். பாத்திமா ரிப்கா (VI STD) - ஆங்கிலச் சொற்ப்பொழிவு

7. எம்.ஜெ. ஆசியா கதிஜா (VII STD) - ஆங்கிலச் சொற்ப்பொழிவு

8. எ.எஸ். அகமது முன்ஷிரா (X11 STD) - ஆங்கிலச் சொற்ப்பொழிவு

 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற நோக்கில் ஆசிரியப்பணி சிறக்க கண்கவர் கலைநிகழ்ச்சிகளைத் தந்து மாணவ - மாணவிகள் சிறப்பு செய்தனர்.

 

பள்ளியின் முதல்வர் திருமதி.மீனாசேகர் அவர்கள் “ஆசிரியரும் மாணவரும் இரு கைகள் கோர்த்து செயல்பட்டால்  உலகையே வெல்லாம்” என்று தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அவரைத் தொடர்ந்து தமிழாசிரியர் எஸ். மாரியம்மாள் அவர்கள் நன்றியுரை நவின்றார்கள்.

 

மேலும் உலக புத்தக வாசிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்புத் திறனையும் சேமிக்கும் பழக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் “வாசிப்பும் சேமிப்பும் இரு கண்கள்” என்ற தலைப்பில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி எம்.ஒய். தௌலத் ரிஸ்வானா அவர்கள் சொற்ப்பொழிவு ஆற்றினர். இதனை தொடர்ந்து புத்தக வாசிப்பு தின நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர் சிறப்பு தின நிகழ்சிகள் இனிதே நிறைவுப்பெற்றது.

 

bottom of page