L K MATRICUALTION HIGHER SECONDARY SCHOOL
RUN BY LKS GOLD HOUSE EDUCATIONAL CHARITABLE TRUST
AN ISO 9002 TUV CERTIFIED SCHOOL
A.S. SULAIMAN BLOCK 2011
NEWS & EVENTS - 2016
மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை!
Posted February 25, 2016
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அனுராகம் புத்தக நிலையம் சார்பில் - “எனக்குப் பிடித்த இரண்டு நூற்கள்” எனும் தலைப்பில் - 06 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ-மாவியருக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து 310 மாணவ-மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின்
12ஆம் வகுப்பு மாணவி டீ.மோனிகா ரிம்ஸா முதலிடத்தையும்,
08ஆம் வகுப்பு மாணவி எஸ்.எல்.ஜுலைகா அஃப்ரா இரண்டாமிடத்தையும்,
ஏ.ஏ.சேகு ஸஜீலா (08ஆம் வகுப்பு), எம்.ஏ.ஏ.முஷர்ரஃபா ஸுல்தானா (11ஆம் வகுப்பு), எம்.எஸ்.ஹபீபா (10ஆம் வகுப்பு), எஸ்.எம்.டீ.ஜைனப் தாஹா (06ஆம் வகுப்பு)
ஆகிய மாணவியர் மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
முதல் மூன்றிடங்களைப் பெற்ற இவர்களுக்கு, வரும் மார்ச் மாதத்தில் முறையே 1000, 500, 250 ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள்: நகரளவில் முதல் மூன்றிடங்களையும் எல்.கே.மெட்ரிக் பள்ளி தக்க வைத்தது!!
Posted May 25, 2016
பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. அதன்படி, காயல்பட்டினம் நகரளவில் முதல் மூன்று இடங்களையும் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தக்கவைத்துக் கொண்டுள்ளது. அப்பள்ளியின் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவியரே நகரளவில் முதல் மூன்றிடங்களையும் பெற்றுள்ளனர்.
(1) நகரளவில் முதல் இடம்
கே.ஃபரீதா - 496
இவர், தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடத்தையும், மாநில அளவில் நான்காமிடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(2) நகரளவில் இரண்டாம் இடம்
எம்.சந்தியா - 495
(3) நகரளவில் மூன்றாம் இடம்
ஃபாத்திமா காமில் - 493
சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.
SSLC 2016: காயல்பட்டினம் மாணவி மாவட்ட அளவில் மூன்றாமிடம்! நகரளவில் முதலிடம்!! விருது அளித்து மாவட்ட ஆட்சியர் பாராட்டு!!!
Posted May 25, 2016
இன்று வெளியான பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளின் படி, காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி கே.ஃபரீதா நகரளவில் முதலிடமும், தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார். இதற்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அவருக்கு விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறார். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் முஹ்யித்தீன் தெருவைச் சேர்ந்த மாணவர் கே.ஃபரீதா. இவரது தந்தை பெயர் ஏ.எச்.கலீல். சஊதி அரபிய்யாவில் பணியாற்றுகிறார். தாயார் ஜெ.ஹவ்வா - இல்லத்தரசி.
மாணவி கே.ஃபரீதா, காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் பயின்று, 10ஆம் வகுப்பு தேர்வெழுதியிருந்தார். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி, அவர் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, காயல்பட்டினம் நகரளவில் முதலிடமும், தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடமும், தமிழ்நாடு மாநில அளவில் நான்காமிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
பாடவாரியாக அவரது மதிப்பெண்கள் விபரம்:-
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 99
சமூக அறிவியல் 99
மொத்ததம் - 500க்கு 496 மதிப்பெண்கள்.
தனது சாதனை குறித்து, மாணவி கே.ஃபரீதா கூறியதாவது:-
எனது தந்தையின் தந்தை (பாட்டனார்) டாக்டர் அபுல்ஹஸன் அவர்கள், காயல்பட்டினத்தின் மூத்த மருத்துவர். தற்போது 77 வயதை அடைந்த நிலையிலும், இறையருளால் அவர் மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
சுகவீனமுற்ற நிலையில் நள்ளிரவில் தன்னைத் தேடி வீட்டுக்கு எந்த நோயாளிகள் வந்தாலும், இன்முகத்துடன் மருத்துவ சேவையாற்றி வருகிறார். அவர்களது இந்தப் பண்பு என்னை மிகவும் கவர்ந்ததால், “நானும் மருத்துவராகி, பாட்டனாரைப் போல சேவை செய்ய வேண்டும்” என்ற எண்ணம் என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.
எனது ஆரம்பக் கல்வி முதல் இன்று பத்தாம் வகுப்பு வரையிலும் பெரும்பாலும் முதல் மதிப்பெண்ணும், எப்போதாவது இரண்டாவது மதிப்பெண்ணும் பெறுவது என் வழமை.
இன்று தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றமைக்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. ம.ரவிக்குமார் என்னையும், மாவட்ட அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியரையும் இன்று காலையில் அழைத்து, வாழ்த்திப் பாராட்டி, விருது வழங்கி கவுரவித்தார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதோடு, இன்னும் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நல்ல மதிப்பெண்ணைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே உண்டு என்றாலும், மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
எனது இச்சாதனைக்கு, என் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. மீனா சேகர், வகுப்பாசிரியை திருமதி. அந்தோணியம்மாள் ஆகியோர் பள்ளியிலும், எனது தாய் வழி பாட்டனார் மரியாதைக்குரிய ஜலால் ஹாஜியார், என் அன்புத் தாயார் ஜெ.ஹவ்வா ஆகியோர் என் வீட்டில் எனக்குத் தொடர்ந்து அளித்து வந்த அரவணைப்பும், ஆதரவும், ஊக்கமுமே என்னை இன்று சாதனையாளராக்கியிருக்கிறது.
இதற்காக, எல்லாம்வல்ல இறைவனுக்கும், ஊக்கமளித்த இவர்கள் யாவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேல்நிலைக் கல்வியில் முதல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பயின்று, ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணைப் பெற்று, மெரிட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, சிறந்த மருத்துவராகி, என்னாலியன்ற சேவைகளை எல்லா மக்களுக்கும் - குறிப்பாக ஏழை - எளிய மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது. இதற்கு இறைவன் அருள் புரிய நீங்கள் யாவரும் எனக்காகப் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மாணவி கே.ஃபரீதா கூறினார்.
பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவி மனதாரப் பாராட்டினர்.
மாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவர் முதலிடம்! மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கினார்!
Posted June 30, 2016
மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற - காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவருக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பணப்பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளார். விபரம் வருமாறு:-
இந்திய குழந்தைகள் நல வாரியத்தின் சார்பில், 2015ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர் டீ.ஹைதர் அலீ ஷகீக் முதலிடத்தைப் பெற்றார்.
27.06.2016. அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், அவருக்கு ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும், சான்றிதழையும் வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, சமூக பாதுகாப்புத்துறை தனித்துறை ஆட்சியர் & நேர்முக உதவியாளர் (பொது பொறுப்பு) காமராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்து எழில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
முதற்பரிசை வென்ற எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர் டீ.ஹைதர் அலீ ஷகீக்கை, பள்ளி தாளாளர், நிர்வாகிகள், தலைமையாசிரியை மீனா சேகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் மனதாரப் பாராட்டினர்.
பல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு பரிசுகள்!
Posted September 01, 2016
பல்வேறு போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் பரிசுகளை வென்றுள்ளனர்.
சுதந்திர நாள் விழாவையொட்டி, அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில், 977 பேர் பங்கேற்றனர். அதில் எல்.கே.மெட்ரிக் பள்ளியின் 152 மாணவியர் பதக்கங்களைப் பெற்றனர். 15 பேர் சிறப்புப் பரிசுகளையும் வென்றுள்ளனர்.
Holy Cross Crosa 2016 போட்டிகளில் பின்வருமாறு எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.
பல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு சிறப்பிடங்கள்! மாநில அளவிலான போட்டிக்கு ஒரு மாணவி தகுதி!!
Posted November 16, 2016
அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவ-மாணவியர் பலர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால், பள்ளி மாணவ-மாணவியருக்கான தனித்திறன் போட்டிகள் தூத்துக்குடியில் நடத்தப்பட்டன. முதல் சுற்றுப் போட்டிகள் 01.11.2016. அன்றும், தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 04.11.2016. அன்றும் நடைபெற்றன. இப்போட்டிகளில் வென்ற எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் விபரம்:-
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால், பள்ளி மாணவ-மாணவியருக்கான பேரிடர் மேலாண்மை போட்டிகள் தூத்துக்குடியில் நடத்தப்பட்டன. தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் நவம்பர் 01, 02, 03 நாட்களிலும், வருவாய் மாவட்ட அளவிலான இரண்டாம் நிலை போட்டிகள் நவம்பர் 08, 09, 10 நாட்களிலும் நடைபெற்றன. இப்போட்டிகளில் வென்ற எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் விபரம்:
கமேற்படி போட்டிகளில், வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி, 23.11.2016. அன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் நாளை முன்னிட்டு, 13.11.2016. அன்று ஆறுமுகநேரியில், விடுதலைப் போராட்ட வீரர்கள் அமைப்பால் நடத்தப்பட்ட போட்டிகளில், எல்.கே.மெட்ரிக் பள்ளியின் இரண்டு மாணவியர் பரிசுக் கேடயமும், சான்றிதழும் பெற்றுள்ளனர். அவர்களின் விபரம்:-
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.
மாநில ஓவியப்போட்டியில் காயல் LK பள்ளி மாணவி முதலிடம்!!
Posted November 28, 2016
அதருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டியில் எல்.கே மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி எஸ்.டி.என். மும்தாஜ் ருக்கைய்யா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.இம்மாணவி ஆங்கில பேசாற்றலிலும் திறமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பிடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் சாதனை மாணவியரை மனதாரப் பாராட்டினர்.
எல்.கே. மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவ - மாணவர்கள் பரிசு மழை!!
Posted December 07, 2016
எல்.கே மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ - மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றது குறித்து பள்ளியின் முதல்வர் திருமதி. மீனா சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிக்குலேஷன் பள்ளியின் மாணவ - மாணவிகள், இவ்வாண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம். எமது பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஹாஜி. S. அக்பர் ஷா, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 'தொடர் முன்னேற்றம்' என்னும் உயரிய நோக்கத்தை கொண்டு எமது பள்ளி செயல்படுகின்றது என்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு (2016) எமது மாணவ கண்மணிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர்கள் பெற்ற இடங்கள் மற்றும் பரிசுகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
1. மனித வள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி கழகம், தருமபுரி சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டி:
2. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் சார்பாக நடைபெற்ற சிவந்தி வினாடி - வினா போட்டி:
3. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சார்பில் ஓவியப் போட்டி நமது பள்ளியின் அரங்கில் நடைபெற்றது. அதில் நமது பள்ளியின் சார்பில் பங்கேற்ற மாணவ - மாணவிகளின் பின் வருமாறு:
4. ரத்னா சாகர் புத்தக பதிப்பகம் சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற இளம் சிட்டுக்கள்:
5. மாணவ மன்றம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற மாணவிகள்:
6. எஸ்.ஆர்.எம். பள்ளிக்கூடத்தின் சார்பாக நடைபெற்ற எஸ்.ஆர்.முத்து நாடார் நினைவு போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற எமது மாணவ - மாணவிகளின் தொகுப்பு:
7. தூத்துக்குடி காமராஜர் கல்லூரியின் சார்பாக நடைபெற்ற இந்தியா அரசியலமைப்பு தின போட்டியில், எமது பள்ளியின் மாணவி கே. பரீதா (11ம் வகுப்பு) அவர்கள் கட்டுரை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று நமது பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
சிறப்பிடங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தமைக்காக, அப்பள்ளியின் நிறுவனர்/தாளாளர் ஹாஜி.எஸ்.அக்பர் ஷா, முதல்வர் ஆர்.மீனா சேகர் மற்றும் ஆசிரியர்கள், போட்டிகளில் பங்கேற்ற மாணவ - மாணவிகளை மனதார பாராட்டினர்.