top of page

​NEWS  &  EVENTS - 2013

Independence Day Sports Meet

Posted August 4, 2013

 

தூத்துக்குடி கல்வி மாவட்ட அனைத்து பள்ளிகள் கழக கூட்டமைப்பின் சார்பில், சுதந்திர தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், தண்டுப்பத்து அனிதா குமரன் மேனிலைப்பள்ளியில், 22-8-2013 ஆம் தேதி நடைபெற்றது.

 

இதில், இப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவி எம்.மஃப்ரூஹா வட்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடமும், அதே வகுப்பைச் சேர்ந்த ஜமீலா ஜுல்ஃபா குண்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனர்.

 

CHESS CHAMPIONSHIP

Posted August 4, 2013

 

தூத்துக்குடி மாவட்டம் தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

 

குடியரசு மற்றும் பாரதியார் தினங்களை முன்னிட்டு, 31.08.2013 அன்று இப்போட்டிகள்  இடம் பெற்றன. நமதூர் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து சதுரங்க விளையாட்டுப் போட்டியில் 6 மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

இப்போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவி U.Z.K..ஹலீமா மூன்றாமிடத்தை அடைந்தார், இம் மாணவியை பள்ளிக்கூட நிர்வாகிகள்,முதல்வர் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர். இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட உயர்நிலை,மேனிலை,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்தியது.

Ronperlo Expo 30

Posted August 4, 2013

 

கடந்த ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை முள்ளக்காடு சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ரோம்பெரிலோ எக்ஸ்போ 30 என்ற போட்டியில் இப்பள்ளியின் 11 ஆவது வகுப்பு மாணவி ஏ.எஸ். அகமது முன்ஸிரா பேச்சுப் போட்டியில் மூன்றாவது பரிசினையும்,  இதே மாணவி நினைவுத் திறன் போட்டியில் இரண்டாவது பரிசினையும், 8ஆவது வகுப்பு மாணவி கே. பரீதா ஓவியப் போட்டியில் இரண்டாவது பரிசினையும் பெற்றனர்.

 

 

 

Inspire Science Award 

Posted August 4, 2013

 

9ஆவது வகுப்பு பயிலும் மாணவி, ஹைச். பாத்திமா சமீரா மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்டு , மாநில அளவில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரில் நடைபெற உள்ள விழாவில் அறிவியல் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.

Inspire science Camp

Posted August 4, 2013

 

பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் ஏ.எஸ். அகமது முன்ஸிரா, எஸ்.ஹைச். ஜன்னத் முஃமினா, எம். சங்கீதா, மற்றும் எஸ்.ஹைச். முஸ்பிகா ஆகியோர் , ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரை, திருநெல்வேலி மேலத்தடியூர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அறிவியல் முகாமில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

 

 

State Drawing Competition

Posted December 2, 2013

 

தர்மபுரியில் உள்ள மனித வள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி கழகம், மாநில அளவில் பள்ளிக்கூடங்களுக்கு இடையே ஓவியப் போட்டி நடத்தியது.

 

ஒரு பள்ளியில், நூறு மாணவ மாணவியர்க்கு மேல் போட்டியில் பங்கேற்பவர்கள் இருந்தால்,அவர்கள் பயிலும் பள்ளியிலேயே, இந்த போட்டியை நடத்த அந்த அமைப்பு அனுமதி வழங்கியது.

அதன் அடிப்படையில் L.K.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த 355 மாணவ மாணவியர் பங்கேற்ற இப்போட்டி , இப்பள்ளியில் 10-09-2013 அன்று நடைப்பெற்றது.

 

இதில் இப்பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவி  ஸஃப்ரீன் மாநில அளவில் முதல் இடம் பெற்றார்.முதல் பரிசு பெற்ற மாணவி  ஸஃப்ரீன் க்கு தங்க பதக்கமும் , ருபாய் 1000 ரொக்க பரிசும் ,சான்றிதழும் வழங்கப் பட்டன.  மேலும் இப்போட்டியில் பங்கேற்ற  கீழ் கண்ட  , 13 மாணவ மாணவியர் கூடுதல் முதல் பரிசு பெற்றவர்களாக தேர்தெடுக்க பட்டனர் . 

 

M.A.B.பாத்திமா ஜுலைஹா (L.K.G)

M.A. கதீஜா பீவி (U.K.G)

M.M.அஹ்மது நஷாத் (1st std)

A.M.அஸ்மா ஜுஹைஃபா (2nd Std)

M.M.மஹ்மூது  நெய்னா (3rd Std)

S.ஆயிஷா முஷாகிரா (4th Std)

M.A. பாத்திமா முஸத்திகா (5th Std) 

T.M.ஆமினா அஃப்ரா (6th Std)

M.L. சதக் அலீ ஃபாத்திமா (7th Std) 

M. மர்யம் முஃப்லிஹா (8th Std) 

H.A.B.ஸாரா சுமய்யா (9th Std)

A.M.பாத்திமா ஃபஸீஹா (10th Std)

S.J.அனிஷா விர்ஜின் மேரி (12th Std) 

 

கூடுதல் முதல் பரிசு பெற்ற 13 மாணவ மாணவியர்க்கு சான்றிதழுடன் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன. பரிசு பெற்ற அனைவரையும் பள்ளியின் தாளாளர் ஹாஜி S.அக்பர்ஷா அவர்களும், பள்ளியின் முதல்வர் திருமதி மீனா சேகர் மற்றும் ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர் .

Inter School Competitions

Posted December 16, 2013

 

HI TECH Polytechnic College நடத்திய மூன்று மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் இடையேயான போட்டிகள் டிசம்பர் 5ம் தேதி நடைபெற்றது. எங்கள் பள்ளியைச் சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் இருபத்து ஒன்று பேர் பங்கேற்றனர்.

 

முதல் பிரிவு : 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை:

 

ஓவியப் போட்டி: கே. பரிதா – முதல் பரிசு

கட்டுரைப் போட்டி: எஸ்.ஏ.சித்தி பாத்திமா – மூன்றாம் பரிசு

பேச்சுப் போட்டி : உம்மு சுலைம் – மூன்றாம் பரிசு

வினாடி வினா : மஹ்மூதா, எஸ். லத்தி ஃபா – மூன்றாம் பரிசு

 

இரண்டாம் பிரிவு: 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை:

 

பாட்டுப் போட்டி : என்.ஏ. ஆயிஷா சில்மியா – முதல் பரிசு

கட்டுரைப் போட்டி: ஜி. மதுமிதா – இரண்டாம் பரிசு

பேச்சுப் போட்டி : ஜே. எஸ். சிராஜ் முவாஃபிக்கா – மூன்றாம் பரிசு

வினாடி வினா : எஸ்.எம். ஆயிஷா நஃபிஷா, பி.எம்.ஏ. சாரா – இரண்டாம் பரிசு

 

மூன்றாம் பிரிவு:11ம் வகுப்பு:

 

பேச்சுப் போட்டி : ஏ.எஸ். அகமது முன்சிரா – முதல் பரிசு

பாட்டுப் போட்டி : எஸ். சஃப்ரின் – முதல் பரிசு

ஜே. மரியம் ரஸிதா – மூன்றாம் பரிசு

வினாடி வினா : S.H. முஸ்பிக்கா, U.Z. K ஹலிமா – இரண்டாம் பரிசு

கட்டுரைப் போட்டி: A.S. ராபியா ருஸ்தா – இரண்டாம் பரிசு

ஓவியப் போட்டி : L.H. ஆயிஷா சித்திக்கா – இரண்டாம் பரிசுV. சத்யா – மூன்றாம் பரிசு

 

முதல் பரிசு பெற்ற மாணவிகளுக்கு ரூ.300 ரொக்கமும், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசு பெற்ற மாணவிகளுக்கு ரூ.200 ரொக்கமும், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

 

மூன்றாம் பரிசு பெற்ற மாணவிகளுக்கு ரூ.100 ரொக்கமும், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.அதிக பரிசுகளைப் பெற்று எம் பள்ளி மாணவிகள் சுழற்கோப்பையை ( Over all Shield ) வென்று வந்தன.

bottom of page