top of page

​NEWS  &  EVENTS - 2012/13

2012 SCIENCE QUIZ

Posted January 10, 2013

 

சென்னையில் உள்ள FIITJEE என்ற நிறுவனம், மாநிலம் தழுவிய பள்ளி மாணவர், மாணவியருக்கான வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. “2012 Science Quiz” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் இப்போட்டியின் இறுதிகட்டத்திற்குரிய தேர்வு, அண்மையில் திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்த தேர்வில் நமது காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிக்குலேசன் மேநிலைப் பள்ளியிலிருந்து மூன்று மாணவிகள் மாவட்ட அளவில் வெற்றியாளர்களாக தேர்வு பெற்றார்கள். இவர்கள் தங்க கேடயம் மற்றும் ரூபாய் பத்தாயிரம் பரிசாக பெற்றுள்ளார்கள்.

 

வெற்றி பெற்ற மாணவிகள் விபரம்:

எம்.எஸ். ஹவ்வா உம்மாள் -  11ம் வகுப்பு

ஹைச். எம். சம்சு குரைஷா – 8ம் வகுப்பு

ஆர்.எஸ். நமீரா – 9ம் வகுப்பு

 

இவ்வாறு தேர்வு பெற்றுள்ள இவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான இறுதிப் போட்டி 20-1-2013 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

 

CROSA COMPETITION

Posted August 16, 2013

 

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில், ஆகஸ்ட் 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்ற, கரோஸா போட்டியில் எல்.கே. மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

 

இடம்பெற்ற அப்போட்டியில், இப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவி சிராஜ் முஆஃபிகா ஜூனியர் பிரிவில் இளம் விஞ்ஞானிகளுக்கான முதல் பரிசினையும், பத்தாவது வகுப்பு மாணவி பி.எம்.ஏ. சாரா ஆங்கிலத் திறன் போட்டியில் இரண்டாம் பரிசினையும் பெற்றார்.

 

இப்பள்ளியின் சார்பில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் போட்டியில் பங்கேற்றதால் பங்கேற்பு சான்றிதழ்களையும் பெற்றனர்.

Ronperlo Expo 30

Posted August 4, 2013

 

கடந்த ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை முள்ளக்காடு சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ரோம்பெரிலோ எக்ஸ்போ 30 என்ற போட்டியில் இப்பள்ளியின் 11 ஆவது வகுப்பு மாணவி ஏ.எஸ். அகமது முன்ஸிரா பேச்சுப் போட்டியில் மூன்றாவது பரிசினையும்,  இதே மாணவி நினைவுத் திறன் போட்டியில் இரண்டாவது பரிசினையும், 8ஆவது வகுப்பு மாணவி கே. பரீதா ஓவியப் போட்டியில் இரண்டாவது பரிசினையும் பெற்றனர்.

Inspire Science Award 

Posted August 4, 2013

 

9ஆவது வகுப்பு பயிலும் மாணவி, ஹைச். பாத்திமா சமீரா மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்டு , மாநில அளவில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரில் நடைபெற உள்ள விழாவில் அறிவியல் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.

Inspire science Camp

Posted August 4, 2013

 

பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் ஏ.எஸ். அகமது முன்ஸிரா, எஸ்.ஹைச். ஜன்னத் முஃமினா, எம். சங்கீதா, மற்றும் எஸ்.ஹைச். முஸ்பிகா ஆகியோர் , ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரை, திருநெல்வேலி மேலத்தடியூர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அறிவியல் முகாமில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

 

 

bottom of page